[X] Close

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னை மாணவி


tamil-nadu-s-anukreethy-vas-crowned-miss-india-2018

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Jun, 2018 10:08 am
  • அ+ அ-

மிஸ் இந்தியா 2018 பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் வென்றார். இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. 30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர். நேற்றிரவு நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் வாகை சூடினார்.

எஃப்பிபி கலர்ஸ் ஃபெமினா மிஸ் தமிழ்நாடு 2018 பட்டத்தை இவர் ஏற்கெனவே வென்றிருந்த நிலையில் ஃபெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தையும் வென்றுள்ளார். இதன் மூலம் 2018 உலக அழகிப் போட்டியில் இவர் இந்தியா சார்பாக கலந்து கொள்வார். அனுக்ரீத்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்ச் பயின்று வருகிறார்.

இந்தப் போட்டியில் முதல் ரன்னர் அப்பாக ஹரியாணாவைச் சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, இரண்டாவது ரன்னர் அப்பாக ஸ்ரேயா ராவ் காமவரப்பு ஆகியோர் தேர்வாகினார். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் பிரபலங்கள் கரண் ஜோஹர், ஆயுஷ்மன் குர்ரானா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னதாக பாலிவுட் நடிகைகள் மாதுரி தீட்சித், கரீனா கபூர் கான் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடனமாடி நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்த்தனர்.

தேர்வாளர்கள் குழுவில் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான், கே.எல்.ராகுல், பாலிவுட நடிகை மலாய்க்கா அரோரா, பாபி தியோல், குனால் கபீர் ஆகியோர் இருந்தனர். உலக அழகி 2017 மனுஷி சில்லார், 2017 யுனைடட் கான்டினன்ட்ஸ் அழகி சனா துவா, மிஸ் இன்டர் கான்டினன்டல் 2017 பிரியங்கா குமாரி ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்கு மகுடன் சூடி கவுரவித்தனர்.

 

 

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close