[X] Close

ஓடிஎஸ்.. ஓட்டுநர் தோழர்கள் சங்கம்: சென்னையில் புதிய கேப் சர்வீஸ்


new-cab-service-in-chennai-gears-up-to-take-on-ola-uber

  • பாரதி ஆனந்த்
  • Posted: 19 Jun, 2018 12:38 pm
  • அ+ அ-

உபெர் கால் டாக்ஸி போன்று புதிதுபுதிதாக வெளிநாட்டு கேப் சர்வீஸ்கள் இந்தியாவில் களமிறங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிக் களமிறங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்திய நிறுவனமான ஓலா உபெருக்கு சவாலாக இருக்கிறது.

உபெர், ஓலா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் சவால்விடும் வகையில் சென்னையைச் சேர்ந்த 3000 கார் ஓட்டுநர்கள் சேர்ந்து ஓட்டுநர் தோழர்கள் சங்கம்- ஓடிஎஸ் என்ற பெயரில் கேப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஓடிஎஸ் என்று சுருக்கப்பட்டுள்ள இந்த ஆப்பை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் டவுன்லோடு செய்யலாம். இந்த முயற்சி குறித்து ஓடிஎஸ் கேப்ஸ் உரிமையாளர் எஸ்.சம்பத் கூறும்போது, "ஓலா, உபெர் போன்ற கேப் கம்பெனிகள் தங்கள் கட்டணங்களை திடீர் திடீரென உயர்த்துகின்றன. ஆனால், ஓடிஎஸ் கேப் சர்வீஸ் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்கும். ஆட்டோ, மினி, செடான், எஸ்.யு.வி., என்று நான்கு வகை வாகனங்களை இயக்கவுள்ளோம்" என்றார்.

கட்டணம் எவ்வளவு?

ஓடிஎஸ் மினி சேவைக்கு 4 கி.மீ., வரை ரூ.80 வசூலிக்கப்படும் அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.14 வசூலிக்கப்படும். வெயிட்டிங் சார்ஜ் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செடானில் பயணிக்கு முதல் 4 கிமீட்டருக்கு ரூ.100-ம் அதன்பின்னர் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.14-ம் வசூலிக்கப்படும்.

எஸ்யுவி ரக கார்களுக்கு முதல் 4 கி.மீட்டருக்கு ரூ.200-ம் அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.22-ம் வசூலிக்கப்படும். இந்த ரக கார்களுக்கு மட்டும் வெயிட்டிங் சார்ஜ் ரூ.2 என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நகர் முழுவதும்  1800 கார்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர்களாக இணைபவர்களுக்கு நல்ல ஊக்கத்தொகை வழங்கப்படும். 

மற்ற கேப் நிறுவனங்கள் ஓட்டுநர்கள் மொத்த வருமானத்தில் 20% மற்றும் ஜிஎஸ்டியை வசூலிக்கிறது. ஆனால், ஓடிஎஸ் கேப்ஸ் ஓட்டுநர்களிடம் வருமானத்தில் 7% மற்றும் ஜிஎஸ்டியாக 5% மட்டுமே வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close