[X] Close

அணைகளை தூர்வாரி பராமரிக்காததால்  100% நீர் தேக்க முடியவில்லை: அரசு அலட்சியம் காட்டுவதாக நெல்லை விவசாயிகள் புகார் 


dam-water-storage-issue

பாபநாசம் அணையில் நேற்றைய நிலவரப்படி 78.25 அடி தண்ணீர் இருந்தது

  • kamadenu
  • Posted: 19 Jun, 2018 11:53 am
  • அ+ அ-

கோடை காலத்தில் அணைகளை தூர்வார நடவடிக்கை எடுக்காததால் குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பியும் நீர் இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. 

தென்மேற்கு பருவமழை பெய்வதால், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆனால், மழைக் காலத்தில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 

சேர்வலாறு அணையில் கடந்த 15-ம் தேதி நீர்மட்டம் 116.14 அடியாக இருந்தது. நேற்று இந்த அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக இருந்தது. 3 நாட்களில் நீர்மட்டம் சுமார் 16 அடி குறைந்துள்ளது. சேர்வலாறு அணையில் இருந்து பாபநாசம் அணைக்கு சுரங்கப்பாதை வழியாக தண்ணீர் திருப்பப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

ஆனால், கடந்த சில நாட்களாக பாபநாசம் கீழணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடிக்கு மேல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

குண்டாறு, கருப்பாநதி 

தென்மேற்கு பருவமழையால் கருப்பாநதி அணை, குண்டாறு அணை, கொடுமுடியாறு அணை முழுமையாக நிரம்பியுள்ளன. இந்த அணைகளுக்கு வரும் நீர், உபரி நீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. கொடுமுடியாறு அணையின் மொத்த கொள்ளளவு 121.84 மில்லியன் கனஅடி. அணை நிரம்பியதால் 121.84 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. 

குண்டாறு அணையின் மொத்த கொள்ளளவு 26 மில்லியன் கனஅடி. இந்த அணை முழுமையாக நிரம்பிய நிலையில், அணையில் 18.43 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. அணையில் 70.90 சதவீதம் அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. 

இதேபோல், கருப்பாநதி அணையின் மொத்த கொள்ளளவு 185 மில்லியன் கனஅடி. இந்த அணை நிரம்பிய நிலையில், நீர் இருப்பு 116.82 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது. 63.15 சதவீத நீர் இருப்பே உள்ளது. 

தூர்வாரினால் மட்டுமே...

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெள்ளம் ஏற்படும்போது அடித்து வரப்பட்ட மண், கற்கள் அணையில் அதிகமாக தேங்கி உள்ளது. இதனால், குண்டாறு, கருப்பாநதி, ராமநதி, கடனாநதி உள்ளிட்ட சில அணைகளில் 100 சதவீதம் அளவுக்கு நீரைத் தேக்க முடியவில்லை. அணைகளை தூர்வாரினால் மட்டுமே 100 சதவீத நீரைத் தேக்க முடியும்” என்றனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் கூறும்போது, “5 ஆண்டுக்கு ஒரு முறை அணைகளை தூர்வாரினால் மழைக் காலங்களில் முழுமையாக நீரைத் தேக்க முடியும்.

காலத்தில் இயற்கை தரும் நீரைக் கூட முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அணைகளின் அடிப்பகுதியில் ஏராளமாக வண்டல் மண் தேங்கிக் கிடப்பதால் முழு கொள்ளளவுக்கு நீரைத் தேக்க முடியவில்லை. விவசாயத்தை காப்பாற்ற அணைகளை முறையாக தூர்வாரி, பராமரிக்க வேண்டும்” என்றார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close