[X] Close

தென்மேற்கு பருவமழை எதிரொலி: விலை உயர்கிறது வெங்காயம்


onion-price-rise

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் வரத்து குறைவால் மூட்டைகளில் வெங்காயத்தை கட்டி வைக்கும் தொழிலாளர்கள | படம்: ஜி.கார்த்திகேயன்

  • kamadenu
  • Posted: 16 Jun, 2018 15:23 pm
  • அ+ அ-

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து வெங்காயம் வரத்து குறைந்ததால், கடந்த வாரத்தை விட ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.45-க்கு மொத்த மார்க்கெட்டில் விற்பனையானது.

தென் மாவட்டங்களின் முக்கிய வெங்காயச் சந்தைகளில் ஒன்றாக திண்டுக்கல் வெங்காயச் சந்தை உள்ளது. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வெங்காயச் சந்தை நடக்கும். கர்நாடக மாநிலத்தில் இருந்தும், திண்டுக்கல், தேனி, அரியலூர், திருச்சி, கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல் வெங்காயச் சந்தைக்கு விவசாயிகள் மொத்தமாக வெங்காயத்தை கொண்டுவந்து விற்கின்றனர். வழக்கமாக ஒரு நாளைக்கு 5000 மூட்டைகள் (ஒரு மூடை 60 கிலோ) வெங்காயம் வரத்து இருக்கும்.

ஆனால், தென்மேற்கு பருவமழை தொடங்கி கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது. திண்டுக்கல், தேனி, அரியலூர், கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து மட்டும் வெங்காய வரத்து ஓரளவு உள்ளது. இதனால் வழக்கமாக சந்தைக்கு 5000 மூடைகள் வருவது குறைந்து, நேற்று 2000 மூடைகள் மட்டுமே வெங்காய வரத்து இருந்தது.

கடந்த வாரம், மொத்த விலையில் வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்றது. நேற்று வெங்காய வரத்து பாதிக்கு மேல் குறைந்ததால் விலை அதிகரித்து கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்றது.

இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது: கர்நாடகாவில் பருவமழை தொடங்கியதால், வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டு, அங்கிருந்து வெங்காயம் வரவில்லை. சில மாவட்டங்களில் இருந்து மட்டும் வெங்காய வரத்து உள்ளது. தென்மேற்குப் மழை தொடங்கும்பட்சத்தில் வெங்காய அறுவடை இங்கும் பாதிக்கும். இதனால் வெங்காய வரத்து மேலும் குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போது மொத்த விலையில் ரூ.40 முதல் ரூ.45 வரை விற்கிறோம். வெளிமார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் சற்று கூடுதலாக விற்பனை செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close