[X] Close

அரசியலுக்குத் தயாராகிவிட்டாரா விஜய்?- மதுரையைக் கலக்கும் போஸ்டர்கள் சொல்லும் சேதி என்ன?


vijay-birthday-posters-in-madurai

படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Jun, 2018 13:26 pm
  • அ+ அ-

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற சொலவடை ஒரு பெரிய காரியத்துக்கான முன்னறிவிப்பை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அதேபோல்தான் நம்மூரில் அரசியலுக்கு அடிபோடும் பிரபலங்கள் மக்களின் நாடியை அறிய போஸ்டர்களை அவிழ்த்துவிடுவது வழக்கம்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் பிறந்தநாள் போஸ்டர்கள் வாயிலாக சூசகமாகத் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் போயஸ் கார்டனில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அவரது அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. 

அந்தப் போஸ்டர்கள் ஊடகங்களில் செய்தியாகவே ரஜினிகாந்த் ரசிகர்களிடம் அடக்கி வாசிக்கவும் என அறிவுரை சொன்ன கதையும் நடந்தது.

இப்போது அந்த போஸ்டர் கலாச்சாரத்தில் நடிகர் விஜய்யும் இறங்கியிருக்கிறார். அவர் நேரடியாக இறங்கியிருக்கிறாரா இல்லை ரசிகர்களின் அன்பால் இறக்கிவிடப்பட்டிருக்கிறாரா என்பதெல்லாம் இப்போதைக்கு கேள்விக்குறியே. 
ஆனால், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கு ஒரே நிவாரணி விஜய் அரசியலுக்கு வருவதுதான் என்பதுபோல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர் விஜய் தனது பிறந்தநாளை வரும் 22-ம் தேதி கொண்டாடுகிறார். இந்நிலையில், வருங்கால முதல்வரே என்று வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கெனவே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன்மிக அரசியல் பாதையில் சென்று கொண்டிருக்க இன்னொரு ஜாம்பவான் மய்ய அரசியல் செய்து கொண்டிருக்க மூன்றாவதாக விஜய் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தலைவா படத்தில் வந்த வசனங்களும், மெர்சல் படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடலும் ஏற்கெனவே விஜய்க்கு அரசியல் அடையாளம் காண்பித்த படங்கள். இனி நிழல் தாண்டி நிஜத்தில் 'தலைவா' என்றழைக்கப்படுவாரா விஜய் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

இப்போது மதுரையைக் கலக்கும் போஸ்டர்களைப் பார்ப்போம்..

- படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close