[X] Close

ஐடிஐ விண்ணப்பிக்க நாளையே கடைசிநாள்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 17:26 pm
  • அ+ அ-

தமிழகத்தில் ஐ.டி.ஐ., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை ( ஜூன் 15) கடைசி நாளாகும். மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 87 அரசு ஐ.டி.ஐ.,களும், 476 தனியார் ஐ.டி.ஐ.,களும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி மோட்டார் மெக்கானிக், பிட்டர், டர்னர் என்று மொத்தம் தொழிற்படிப்புகள்  உள்ளன.                                                                                                                                 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2019-ஆம் ஆண்டிற்கான (ஐ.டி.ஐ) மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. ஜூன் 15 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில், கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், சு.மு.நகர், கிண்டி (மகளிர்) ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி பெறவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்து பயிற்சி பெறவும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் ஆகஸ்ட் 2019 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு, தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான தேதி விவரம் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். விண்ணப்பிக்க நாளை (ஜூன் 15)  கடைசி நாள் ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஐ.டி.ஐ.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க, அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இலவச பஸ் பாஸ், லேப்டாப், மாத உதவித்தொகை ரூ.500, சீருடைகள், பயிற்சி புத்தகங்கள், வரை கருவிகள் என்று மொத்தம் 7 இலவசங்களை அறிவித்துள்ளது. மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடும் உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close