[X] Close
 

சென்னைக்கு இன்று மழை வாய்ப்பு பிரகாசம்: வெதர்மேன் கணிப்பு


chennai-rain-update-today-rain-chances-are-very-very-bright

  • பாரதி
  • Posted: 15 Jun, 2018 15:36 pm
  • அ+ அ-

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "சென்னையில் மழை பெய்ய வேண்டுமானால் மற்ற பகுதிகளில் மழை நிற்க வேண்டுன் என நான் கூறிக்கொண்டே இருந்தேன். அதேபோல், மேற்குக் கரையோரப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. மேற்கிலிருந்து வீசும் காற்றும் வலுவிழந்துள்ளது. இதுதான் நமது மேஜிக் நிபுனரான கடற்காற்று எந்தத் தடையுமின்றி உள்நோக்கி நகர உகந்த தருணம்.

நேற்று மழைக்கான வாய்ப்பு அருகில் இருந்தது. ஆனால், இன்று எல்லாமே மிகச்சரியாகக் கூடி வந்துள்ளது. கடற்காற்று உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது, வெஸ்டர்லீஸ் எனப்படும் மேற்கிலிருந்து வரும் காற்றை சரியாக செங்கோணத்தில் வெட்டுவதால் நிலைமை சாதகமாக இருக்கிறது.

எனவே சென்னை நகரின் புறநகர்ப் பகுதியில் மழைக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. 

மழையை ரசிக்கவும். நகரின் எந்தெந்த பகுதியில் எல்லாம் மழை பெய்யும் என இப்போதே கூற வாய்ப்பில்லை. ஆனால், நிச்சயமாக மழை உண்டு" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close