[X] Close

பக்கத்து வீட்டு பெண்ணுக்கு வெட்டு: சட்டப்பேரவை தலைவரின் கார் ஓட்டுநர் கைது


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 15:14 pm
  • அ+ அ-

தண்ணீர் பிரச்சினையில் பக்கத்து வீட்டுப் பெண்ணை கத்தியால் முகத்தில் வெட்டியதாக சட்டப் பேரவைத் தலைவர் தனபாலின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகன் (32) இவரது மனைவி சுபாஷினி(28). 

இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆதி மூல ராமகிருஷ்ணன் இவர் சட்டப்பேரவைத் தலைவர் தனபாலன் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் சட்டப்பேரவைத் தலைவருக்கு இரண்டு கார் ஓட்டுநர்கள் உண்டு அவர்களில் ஒருவராக இவர் பணியாற்றி வருகிறார்.

இன்னிலையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பயன்பாட்டிற்கு தண்ணீர் இல்லை என்பதற்காக மோகன் நேற்றிரவு தண்ணீருக்காக மின்மோட்டாரை போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஆதிமூலம் ராமகிருஷ்ணன், மோகனிடம் தகராறு செய்துள்ளார்.

தண்ணீர் சேகரித்து வைக்கும் சம்பில் தண்ணீர் இல்லாத பொழுது எப்படி மோட்டார் போடலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டு மோகனை ஆதிமூலகிருஷ்ணன் உதைத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த மோகனின் மனைவி சுபாஷினி இதைக் கண்டு ஆதிமூல ராமகிருஷ்ணனிடம் கணவனை ஏன் தாக்குகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

 இதையடுத்து சுபாஷினியிடம் மோதலில் ஈடுபட்ட ஆதிமுலராம்கிருஷ்ணன் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து சுபாஷினியை வெட்டியுள்ளார். இதில் முகத்தில் தாடையில்  பலத்த வெட்டுக்காயம் சுபாஷினிக்கு ஏற்பட்டது.

இதையடுத்து முகத்தில் வெட்டுக்காயம்பட்ட சுபாஷினி தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது தாடையில் 6 தையல் போடப்பட்டுள்ளது.

தன்னையும், கணவரையும் தாக்கி தன்னை கத்தியால் தாடையில் வெட்டி ரத்தக்காயம் ஏற்படுத்தியதாக சுபாஷினி அளித்த புகாரின்பேரில் தலைமை செயலக பணியாளரும், சட்டப்பேரவைத்தலைவரின் ஓட்டுநருமான ஆதிமூல ராமகிருஷ்ணனை சங்கர் நகர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close