[X] Close

கால்நடைகளுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 11:47 am
  • அ+ அ-

கால்நடைகளுக்கு நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டுவிட்டன. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

 

இந்நிலையில் கால்நடைகளுக்கு நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ''தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கிராமங்களில் கால்நடைகளுக்கென தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும்'' என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close