[X] Close

தாம்பரம், பல்லாவரத்தில் குறைந்த மின்அழுத்தம்: நுகர்வோர் குறைதீர் முகாமில் பொதுமக்கள் புகார்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:56 am
  • அ+ அ-

தாம்பரம், பல்லாவரம், மாடம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவதாக நுகர்வோர் குறைதீர் முகாமில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

தாம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜாவும் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:தாம்பரம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் அவ்வப்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு வாரமாக உள்ளது. குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக ஏசி, மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் வெப்பத்தாலும், தண்ணீர் இன்றியும் பாதிக்கப்படுகிறோம். பல மோட்டார்கள் பழுதாகி விட்டன என்றனர்.

பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. பழைய மின்சாரக் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய கம்பிகளைப் பொருத்த வேண்டும். அதேபோல் மேம்படுத்தப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், மின்தடை குறித்து தொலைபேசியில் புகார் தெரிவித்தால் மின்வாரிய ஊழியர்கள், உதவி பொறியாளர்கள் உட்படயாரும் சரியாக பதில் அளிப்பதில்லை. பல நேரங்களில் போனையேஎடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்களின் குறைகளை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close