[X] Close

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும்: காஞ்சிபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் உறுதி


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:57 am
  • அ+ அ-

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தனது மகன் படப்பிடிப்பு தொடர்பாக பூஜை செய்வதற்காகக் காஞ்சிபுரம் வந்த அவர் பூஜைக்கு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

எனது மகன் சண்முகபாண்டியனின் 3-வது படம் பூஜை போடப்பட்டுள்ளது. வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. காஞ்சிபுரத்தைச் சுற்றித்தான் இதற்கான கதைக்களம் உள்ளது. ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் 40 ஆண்டுகள் கழித்து வெளிவர உள்ளார். அந்த விழாவும் கதையுடன் சேர்க்கப்படும்.

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் கூறியது:

தமிழகத்தில் மழையில்லாததால்தான் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. தேமுதிக சார்பில் முதலில் லாரிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினோம். இனி வரும் காலங்களில் மழை நீரை சேமித்தால் இந்தப் பிரச்சினை வராது. மத்திய, மாநில அரசுகளிடம் இது குறித்து பேசுவோம். முத்தலாக் தடை சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என்றார்.

வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும். அதிமுகவின் பொதுச் செயலர், ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சினை அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதுகுறித்து நாம் பேசுவது நாகரிகமாக இருக்காது.

காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சினை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. அதுபோல் தண்ணீரிலும் தன்னிறைவு பெற வேண்டும். காவிரிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகாந்த் உடல் நலத்துடன் நல்ல நிலையில் உள்ளார். வரும் உள்ளாட்சி தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்வார் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close