[X] Close

கீழடியில் 6 மாதங்களில் அருங்காட்சியகம்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்


6

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:00 am
  • அ+ அ-

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப்பணியை நேற்று தொடங்கிவைத்தஅமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே நடந்த அகழாய்வில் தங்கத்தால் ஆன 6 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. ஐந்தாம் கட்ட அகழாய்வு 4 முதல் 5 மாதங்களில் முடிக்கப்படும். முதல் முறையாக புவிகாந்தவியல் முறை மூலம் தொல்பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடித்துஅகழாய்வுப் பணி தொடங்கப்படுகிறது. கீழடியில் 2 ஏக்கரில் அருங்காட்சியகம் மற்றும் அகழ் வைப்பகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும். ஆறு மாதங்களில் அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்படும்.

மதுரையிலுள்ள உலகத் தமிழ்சங்கத்தில் தமிழன்னை சிலையை முதலில் பளிங்கு கல்லில் அமைக்கமுடிவு செய்தோம். பளிங்கில் வேலை செய்யக்கூடிய ஆட்கள் குறைவாக இருப்பதால் கருங்கல்லில் வைக்க சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ரூ.24 கோடியில் மருதுபாண்டியர் கோட்டை உட்பட 12 கோட்டைகள் சீரமைக்கப்படும்.

திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சை சர்ஜா மாடி, டேனிஷ்கோட்டை ஆகிய 3 அகழ் வைப்பகங்கள் ரூ.19.20 கோடியில் சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close