[X] Close

கம்பி ஏற்றிச் சென்ற லாரியால் விபத்து; 3 பஸ் பயணிகள் உயிரிழப்பு


3

  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 08:02 am
  • அ+ அ-

சென்னையில் இருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்ற தனியார் பேருந்து ஒன்று, நேற்று அதிகாலை சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையான விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் அருகே விபத்தில் சிக்கியது.

புதுச்சேரியில் இருந்து ஆத்தூருக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரியை பின் தொடர்ந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த டெல்லி சிவாசிங் (36), ஆத்தூர் வினோத்குமார் (31), ஈரோட்டு முகமது ஜில்பர் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பேருந்து ஓட்டுநர் செல்வம் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். தியாகதுருகம் போலீஸார், உடல்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சரக்கு வாகனங்களில் கம்பிகள், குழாய்கள், தகரம் மற்றும் மரச் சாமான்கள் போன்ற பொருட்களைஅனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு கொண்டு செல்லும்போது, வாகனத்தின்விளிம்பை பின்னால் வரும் வாகனத்துக்கு அடையாளப்படுத்தும் வகையில் சிவப்புத் துணியையோ, சிவப்பு விளக்கையோ பொருத்துவதும் இல்லை. இந்த விபத்துக்கும் இதுவும் ஒரு காரணம் ஆகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close