[X] Close

சிறுமியை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி அவதூறு போக்சோ சட்டத்தில் பெண் கைது


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:45 am
  • அ+ அ-

சென்னையில் 16 வயது சிறுமியை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

நடிகர் விஷால் தனது வீட்டின் அருகேயுள்ள பெண்ணின் வீட்டில் இருந்து தினமும் சுவர் ஏறிக் குதித்து ஓடுவதாக கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்ற பெண், ‘மி டூ’ இயக்கம் மூலம் முகநூல் பக்கத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி சார்பில் தேசிய குழந்தைகள் நல ஆணையத்துக்கு புகார் அளிக் கப்பட்டது. புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய விசார ணையில், விஸ்வதர்ஷினிக்கும் அவரது வீட்டுக்கு அருகில் வசிக் கும் பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறில், அந்த பெண்ணின் பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி, ஆபாசமான படங்களையும் அவ தூறு கருத்துகளையும் சமூக வலைத்தளத்தில் விஸ்வதர்ஷினி பதிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக் கும் சைபர் கிரைம் போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

தன்மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருப்பதை அறிந்த விஸ்வ தர்ஷினி தலைமறைவானார். அவரை போலீஸார் தேடிவந்த நிலையில், திருச்சங்கோட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீஸார் அவரைக் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close