[X] Close

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்: பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்க திட்டம்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:47 am
  • அ+ அ-

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். அங்குபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளார்.

மத்தியில் புதிய அரசின் முதல் நிதி ஆயோக் கூட்டம், பிரதமர் மோடிதலைமையில் நாளை (15-ம் தேதி)நடக்கிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கே.பழனிசாமி இன்றுடெல்லி புறப்பட்டு செல்கிறார். அவருடன் சில மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் செல்கின்றனர். நிதி ஆயோக் கூட்டம் முடிந்ததும், நாளை இரவுஅனைத்து மாநில முதல்வர்களுக்கும், பிரதமர் மோடி சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதிலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் சார்பில் நேரம் கோரப்பட்டுள்ளது. இதுதவிர, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டமுக்கிய மத்திய அமைச்சர்களையும் முதல்வர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமியுடன் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி செல்வதாக கூறப்பட்டது. அப்போது, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், துணைமுதல்வருடன் அதிமுக நிர்வாகிகள் சிலரும் சென்று, பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் நடந்தஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இனி இரட்டை தலைமைதான் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லிசெல்வது தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் டெல்லி செல்வது நேற்றிரவு வரை உறுதி செய்யப்படவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close