[X] Close

சென்னையில் திடீர் மழை


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:40 am
  • அ+ அ-

வெப்ப அலையின் பிடியில் சிக்கி தகித்துக் கொண்டிருந்த சென்னையின் ஒருசில இடங் களில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது.

கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்த பாடில்லை. தொடர்ந்து வெயில் கொளுத்தி வருவதால் பாத சாரிகளும், இருசக்கர வாக னங்களில் செல்வோரும் அவதி அடைந்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்த போதும், சென்னையில் மட்டும் சிறு தூறல்கூட பெய்யாததால் மக்கள் வெப்ப அலையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மக்கள் மகிழ்ச்சி

இதற்கிடையே, சென்னை நகரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. வெயிலின் தாக்கம் வழக்கம்போல் கடுமை யாக இருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் சென்னையின் சில பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் வேளச் சேரி, மடிப்பாக்கம் உள் ளிட்ட ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close