[X] Close

கோதாவரி ஆறு கலக்குமிடத்திலிருந்து மன்னார் வரையுள்ள கடற்பரப்பை ‘சோழ மண்டல கடல்’ என அறிவிக்க வேண்டும்: சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 14 Jun, 2019 07:33 am
  • அ+ அ-

கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார்வரையுள்ள கடல் பரப்பு, சோழமண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அப்பெயரை மரபு அடிப்படையில் 'சோழ மண்டல கடற்பகுதி' என நிறுவிட வேண்டும் என்று அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலக பெருங்கடல்களுக்கான நாளையொட்டி புதுச்சேரி கடல்சார் சூழலியல் அருங்காட்சியகத்தில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. இதற்கு அருங்காட்சியக நிறுவனர் அறிவன் தலைமைவகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஓசெர் மற்றும் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

a2c0b49b_P_233720_5_mr.jpg 

ஓசெர், மேனன் மற்றும் அறிவன் ஆகியோர் கூறியதாவது: இந்தியக் கடலைக் கட்டியாண்ட மிகப்பெரியப் பெருமை முடியுடை மூவேந்தர்களையே சாரும். அதில் சோழர்களின் புகழ் குறித்தே இக்கடல் சோழமண்டலக் கடல் என்று இந்தியாவுக்கு வருகை தந்த அனைத்து ஐரோப்பியர்களாலும் சொல்லப்பட்டது. சோழர்களின் பெருமையும் அவர்களது கடல் ஆளுமையும் உலகம் அறிந்ததே.

இந்திய அரசு சோழர்களின் கடல் ஆளுமைப் பெருமையை எண்ணி, ராஜேந்திர சோழனுக்கு அஞ்சல் தலை ஒன்றினை 2015-ல்வெளியிட்டிருக்கின்றது. 2,17,2000 சதுர கி.மீ கொண்டதாகச் சொல்லப்படும் வங்காள விரிகுடா என்ற பரப்பு சோழ மண்டலக் கடலையும் அதற்குள் அடக்கிக் கொள்கிறது. சோழ மண்டலக் கடலுக்கும் வங்காள விரிகுடாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

வங்க மொழி என்ற சொல்லை19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இடியமா பெங்கல்லா என்று போர்த்துகீசியர்கள் அழைத்தனர். இச்சொல் முகமதிய ஆட்சியின்போதுதான் முதன்முதலில் வருகிறது. 16-ம் நூற்றாண்டில் வங்க மொழியை கவுடமொழி என்றே அழைத்தனர். வங்கதேசப் பகுதியில் தொடங்கி இந்தியாவின் மேற்கு வங்கத்தின் பகுதி வரையில் பரந்த குடாப் பகுதியே விரிகுடா எனப்படுகிறது. இப்பகுதியில்தான் பெரிய ஆறுகளான கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி, மகாநதி போன்ற ஆறுகள் கலக்கின்றன. இதனையே வங்காள விரிகுடா என்று சொல்வது முறையாகும்.

சிறிய அளவிலான குடா, வளைகுடா (GULF) எனவும் பெரிய அளவிலானப் பகுதி விரிகுடா (BAY) எனவும் அழைக்கப்பட்டன. உதாரணமாக, சிறியது - மன்னார் வளைகுடா, பெரியது - வங்காள விரிகுடா.

இப்பகுதி கடல் சோழ மண்டலக் கடல் பகுதியே. இச்சொல் ஐரோப்பியர்களின் ஒலிப்பில் வேறாக விளங்கியது. சோழ மண்டலத்தை அவர்கள் கோர மண்டல் (COROMANDEL) என்று அழைத்தார்கள்.

29 கடல்களையும் 4 பெருங்கடல்களையும் கொண்ட இவ்வுலகில் சோழ மண்டலக் கடலுக்கென ஒரு மிகப்பெரிய வரலாறு உண்டு. சோழ மண்டலக் கடலுக்கான வரலாற்றைப் போலவே இந்தியாவின் மேற்கிலும் மலையாளக் கரை அல்லது மலைவாரக் கடல் என்ற சொற்கள் எப்படி அரபிக் கடல் ஆகும் என்றக் கேள்வியையும் அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கோதாவரி ஆறு கலக்குமிடம் தொடங்கி இலங்கையின் மன்னார் வரை உள்ள கடல் பரப்பு சோழ மண்டலக் கடலுக்கான பெயருக்குரியது. மத்திய மாநில அரசுகள் உடனடியாக அப்பெயரை மரபு அடிப்படையில் நிறுவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close