[X] Close

சந்திரயான் 2-ன் வெற்றிக்கு பிறகு நிலவில் மனிதர்கள் இறங்க வாய்ப்புண்டு: மயில்சாமி அண்ணாதுரை உறுதி


2

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 18:24 pm
  • அ+ அ-

சந்திரயான் 2-ன் வெற்றிக்கு பிறகு நிலவில் மனிதர்கள் இறங்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008 -ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அதில் நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

ரூ.800 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 திட்டம் வெற்றி பெற்றதால் விண்வெளித் துறையில் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து, நிலவை மேலும் ஆராய சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ முடிவெடுத்தது. அதன்படி நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2018 - ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் விண்ணில் செலுத்தப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது. சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜூலை 15-ம் தேதி அதிகாலை 2.51-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக சேலத்தில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சந்திரயான் 1-ன் திட்ட இயக்குநரும் சந்திரயான் 2 உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,

''சந்திரயான் - 2 தொழில்நுட்ப ரீதியில் அடுத்தகட்டமாகத் தரையில் இறங்கி ஆய்வு செய்யக்கூடியது. 6 சக்கர வண்டி, மனிதனைப் போல இறங்கி ஆய்வு செய்யும். நிலவில் நீர் இருப்பதையும்  சந்திரயான் - 2 உறுதி செய்யும். செய்திப் பரிமாற்றத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும்.

எல்லாம் சரியாக நடைபெறும் பட்சத்தில் நிலவில் மனிதன் இறங்கி, ஆராய்ச்சி மேற்கொள்ளவும் இது உதவியாக இருக்கும்'' என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close