[X] Close

நகைக்கடன் தள்ளுபடி என்று ஸ்டாலின் எப்படி கூறினார்?- அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 17:00 pm
  • அ+ அ-

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ஐந்து சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் எப்படி அறிவித்தார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மதுரவாயலில் புதிய மத்தியக் கூட்டுறவு வங்கிக் கிளையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் பேசும்போது, ''திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. ஆனால் தற்போது அந்நிலை மாறியுள்ளது. ஸ்டாலின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்வதாகத் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் என்ன அடிப்படையில் அதை அறிவித்தார் என்று தெரியவில்லை. மக்களவைத் தேர்தலில் நான் தள்ளுபடி செய்வேன் என்று ஸ்டாலின் சொன்னது மக்களை ஏமாற்றும் செயல். எதன் அடிப்படையால் இதை அறிவித்தார் என்று நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்.

அவரின் வாக்குறுதியால்தான் நிறைய மக்கள் இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. எத்தனை பேர் கட்டாமல் இருக்கிறீர்கள் என்பதைப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும்.

ஆனால் யாராக இருந்தாலும் அவர்கள் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும்'' என்றார் செல்லூர் ராஜூ.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close