[X] Close

முதியவர்களை அதிகம் இழிவுபடுத்துவது மகன்களே மருமகள்கள் அல்ல: ஆய்வறிக்கை


elder-abuse-more-from-sons-than-daughters-in-law-survey

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Jun, 2018 11:49 am
  • அ+ அ-

முதியவர்களை அதிகம் இழிவுபடுத்துவது மகன்களே மருமகள்கள் அல்ல என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனம் இந்தியா முழுவதும் வயதானோரின் நிலை குறித்தும் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

இது தொடர்பான அறிக்கை ( Elder abuse in India 2018 – changing cultural and impact of technology ) வியாழக்கிழமை மதுரையில் வெளியிடப்பட்டது. அதன்படி தேசம் முழுவதும் 52% முதியோர் தங்களை தங்கள் மகன்களே கொடுமைப்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 34% முதியவர்களே தங்களை மருமகள்கள் கொடுமைப்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.
மதுரையில் மேற்கொண்ட ஆய்வும் இதே போக்கைத்தான் காட்டுகிறது. 

நாடு முழுவதும் 23 நகரங்களில் 5014 முதியவர்களிடம் நேரில் பேசு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி பெரும்பாலான கொடுமைகள் சொத்தின் காரணமாகவே நடைபெறுவது தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தனிக்குடும்பங்களை விரும்பும் பிள்ளைகளாலும் மூன்றாவதாக முதியவர்கள் என்றால் சுமை என்ற இளைஞர்களின் பார்வையாலும் அவர்களை ஒதுக்கும் நிலை இருக்கிறது.

வார்த்தைகளால் புண்படுத்துவது, அவமரியாதை செய்வது, கண்டுகொள்ளாமல் விடுவது போன்றவற்றால் முதியவர்களை அவர்களது பிள்ளைகள் வேதனைப்படுத்துவதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.
இங்கேயும் படுத்தும் தொழில்நுட்பம்..
தொழில்நுட்பம் வளரவளர எவ்வளவு சவுரியங்கள் இருக்கின்றனவோ அதே அளவுக்கு துன்பங்களும் விளைகின்றன. 64% முதியவர்கள் தங்கள் பிள்ளைகள் மொபைல் ஃபோன், லேப்டாப்பில் செலவழிக்கும் நேரத்தைக்கூட தங்களுடன் செலவழிப்பது இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கலெக்டர் அறிவுரை:
இந்த அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியவர் வீரராகவராவ், "பெற்றோரை ஒதுக்கும் ஒவ்வொரு பிள்ளையும் முதுமை தனக்கும் வரும் என்பதை உணர வேண்டும். முதியவர்கள் தங்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சகித்துக் கொள்ளாமல் துணிச்சலுடன் வெளியே தெரிவிக்க வேண்டும். வயதானோர் நிறைய பேர் தங்கள் பிள்ளைகள் தங்கள் சொத்துக்களைப் பிடுங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். வாழும் காலத்திலேயே ஏன் சொத்துக்களை பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி. சென்னையில் உள்ளது போல் விரைவில் மதுரையிலும் முதியவர்கள் உதவிக்காக ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்படும்" என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close