[X] Close

குரூப்.1 தேர்வில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்


1-24

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 13:54 pm
  • அ+ அ-

கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தேர்வாணையத்தால் கடந்த மார்ச் மாதம் குரூப்.1 தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினார்கள். இதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில்  வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.

கட் ஆஃப் மதிப்பெண்களை இதுவரை வெளியிடவில்லை, அதேப்போன்று தேர்வானவர்கள் பட்டியலையும் வெளியிடவில்லை என தெரிவித்து மேற்கண்ட 18 தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டி.என்.பி.எஸ்.சி'க்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்காத டி.என்.பி.எஸ்.சி ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து, விக்னேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

டி.என்.எஸ்.சி'யின் இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மிகவும் முக்கியம் வாய்ந்த குரூப்-1 தேர்வில் இது போன்ற குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக ஜூன் 17-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் டி.என்.பி.எஸ்.சி'க்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூன் 17-க்கு ஒத்திவைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close