[X] Close

பிரதமரை தமிழக முதல்வர் முன்மொழிந்தது தமிழர்களுக்குப் பெருமை: தமிழிசை


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 12:49 pm
  • அ+ அ-

இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் முன்மொழிந்தது தமிழர்களுக்குப் பெருமை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை கூறியதாவது:

''தமிழ்நாட்டில் இருந்து தமிழக முதல்வர், நமது பிரதமரை முன்மொழியும்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெருமைதான் பட வேண்டும். வேட்டி கட்டிய தமிழன் இதைச் செய்திருக்கிறார். ஸ்டாலின் என்ன சொன்னார்? நான் தான் பிரதமரை அடையாளம் காண்பிப்பேன் என்றார். அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு, பிரதமரை முன்மொழியும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்ல தமிழ் மண்ணில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதனால் பெருமை கிடைத்தது. எதையெடுத்தாலும் விமர்சனம் செய்வேன் என்றால் செய்துகொண்டே இருக்க வேண்டியதுதான்''.

இவ்வாறு கூறினார் தமிழிசை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அடுத்த பிரதமராக நரேந்திர மோடியை முன்மொழியும் வாய்ப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. அவர் மோடியை முன்மொழிந்ததைத் தொடர்ந்து பிரதமராக ஒருமனதாக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close