[X] Close

சென்னை மத்திய கைலாஷ் சாலையில் 6 அடி ஆழத்தில் பள்ளம்: திடீரென ஏற்பட்டதால் பரபரப்பு


6

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 12:16 pm
  • அ+ அ-

சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் உள்ள சாலையில் இன்று அதிகாலை திடீரென பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈசிஆர், ஓஎம்ஆர், கடலூர், புதுச்சேரிக்குச் செல்லும் பிரதான சாலை மத்திய கைலாஷ் வழியாகத்தான் செல்கிறது. வெளியூர் செல்லும் பேருந்துகளும் இந்த சாலை வழியாகத்தான் செல்லும். இந்நிலையில் இன்று அதிகாலை, 6 அடி ஆழத்துக்கு திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளத்தைச் சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளம் உருவானதற்கான காரணம் தெரியவில்லை. எனினும் இப்பள்ளத்தில் இருந்து 20 அடி தூரத்தில் கழிவுநீர்க் குழாயைச் சரிசெய்ய அண்மையில் குழி தோண்டப்பட்டது. அதன் அதிர்வலையால்தான் தற்போது, இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பள்ளம் கழிவுநீர்க் குழாயின் மீது ஏற்பட்டதால், குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறியது. இதனால் சுற்றிலும் துர்நாற்றம் வீசியது.

கடந்த மே மாதம் 27-ம் தேதி, 8 அடி ஆழத்துக்கு இதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. அதை சிமெண்ட் கலவையைக் கொண்டு அதிகாரிகள் அடைத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் இன்று அதே பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கைலாஷைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close