[X] Close

சின்னஞ்சிறு தகராறுகளுக்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசும் அவலம்: புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் பரவும் புதிய வன்முறை கலாச்சாரம்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 09:49 am
  • அ+ அ-

கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார் சாவடியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் அசோகன். இவரது மகன் சிவா கிரிக்கெட் விளையாடும்போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் தாயார் வள்ளி மீது பந்து விழுந்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த 10-ம் தேதி இரவு அசோகனுக்கும், சதீஷுக் கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் அசோகனின் உறவினரான பாலா வின் ஆட்டோ, அசோகனின் சகோத ரரான கோட்டக்குப்பம் அதிமுக நகர செயலாளர் கணேசனின் காரை தீ வைத்து எரித்துள்ளனர். விழுப்புரம் எஸ்.பி ஜெயகுமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண் டார். புகாரின் பேரில் கோட்டக் குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் வழக் குப்பதிவு செய்து சதீஷ், எழில் ஆகி யோரை கைது செய்தனர். மேலும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்த், அப்பு, புதுச்சேரியைச் சேர்ந்த விக்கி ஆகியோரை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கண்டமங்கலம் அருகே நவமால் மருதூர் காந்தி நகரில் வசிப்பவர் ஜாபர் சேட் மகன் மன்சூர் அலி. இவருக்கும் மடுகரையைச் சேர்ந்த சர்புதீன் மகள் ரேஷ்மாவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தன் மகள் ரேஷ்மாவை பார்க்க சர்பு தீன் வந்துள்ளார். அப்போது இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து சர்புதீன் உடனே புறப்பட்டு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று அதி காலை 1.30 மணிக்கு வீட்டுக்கு வெளி யே நிறுத்தப்பட்டிருந்த மன்சூர் அலியின் பைக் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தீ பிடித்து எரிந்து ள்ளது . இதனைக் கண்ட மன்சூர் அலி குடும்பத்தினர் தீயை அணைத் தனர். இது குறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சமூக விரோதிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த பெட்ரோல் குண்டு வீசும் வன் முறைக் கலாச்சாரம், தற்போது சிறுசிறு தனிப்பட்ட தகராறுகளுக்கு பயன்படுத்தும் அவல நிலை வந்துள்ளது. குறிப்பாக புதுச்சேரி யையொட்டிய பகுதிகளில் இக்க லாச்சாரம் அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close