[X] Close

அதிமுகவுடன் பாஜக தோழமை தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:54 am
  • அ+ அ-

மத்திய அரசு திட்டத்தின்கீழ் சென்னைஅரும்பாக்கத்தில் மக்கள் மருந்தகத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாதாரண ஏழை, எளிய மக்களுக்கும் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சார்பில் மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மருந்தகங்களில் சாதாரண மருந்துகள் மட்டுமல்லாது உயிர் காக்கும் மருந்துகளும் 70 சதவீதம் வரை குறைவான விலையில் கிடைக்கின்றன.

பாஜக மாநிலத் தலைவர்கள், மாநில அமைப்பு பொதுச்செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் வியாழக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். கூட்டணி என்பதுதேர்தலுக்கு மட்டுமே. மற்றபடி அதிமுகவுடன் தோழமை தொடரும்.

அதிமுக உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. நான் ஏதாவது கூறினால் அதிமுகவை பாஜக இயக்குவதாக திரித்து கூறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close