[X] Close

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதத்தை உயர்த்தும் அரசாணை: ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 07:46 am
  • அ+ அ-

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும், சீட்பெல்ட் அணியவும் உத்தரவிடக்கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘‘மோட்டார் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிதாக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 96 புகார்கள் பெறப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்புக்காக கடந்த 2000 முதல் 2019 வரை ரூ. 605.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2018-ல் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது 39 லட்சத்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ மோட்டார் வாகன விதிமீறல்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தொகையை அதிகரிப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு ஒருவாரத்தில் அமல்படுத்த வேண்டும். அதேபோல மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கும் அதிகாரத்தை போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அனைத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 21-க்கு தள்ளி வைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close