[X] Close

ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி திடீர் சந்திப்பு: சட்டப்பேரவை கூட்டத்தொடர், எழுவர் விடுதலை பிரச்சினையா?


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 18:23 pm
  • அ+ அ-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்துப் பேசினார். சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஏழு பேர் விடுதலை, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு சமீபகாலமாக சாதகமான சூழ்நிலை இல்லை. மக்களவைத் தேர்தலில் தோல்வி, உட்கட்சிப் பிரச்சினை, திடீரென தோன்றிய ஒற்றைத் தலைமைப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமீபகாலாமாக மேலோங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன. ஊடகங்களில் பேசக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் பேசப்பட்டன.

இந்நிலையில் கூட்டம் முடிந்த சில மணி நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்தார். மாலை 5 மணிக்கு சரியாக முதல்வர் ஆளுநரைச் சந்திப்பதாக இருந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு திடீரென 10 நிமிடங்களுக்கு கான்வாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிளம்பிச் சென்றார்.

ஆளுநரிடனான திடீர் சந்திப்பு குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பினாலும் முக்கியமான விஷயம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை கூட்டுவது சம்பந்தமாகவும், சட்டபேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்தும் பேசப்படவே வாய்ப்பு என்கின்றனர்.

22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வுக்குப் பின் நடக்கும் கூட்டம் என்பதாலும், சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கூட்டம் என்பதாலும், ஆட்சிக்கு எதிராக வேறு பிரச்சினைகள் தீர்மானத்தின்போது நடக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

ஆகவே, சட்டப்பேரவையைக் கூட்டுவது குறித்தும், 7 பேர் விடுதலை குறித்தும் ஆளுநருடனான சந்திப்பின் நோக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close