[X] Close

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏன் அழைக்கவில்லை?- அதிருப்தி எம்எல்ஏ கேள்வி


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 13:28 pm
  • அ+ அ-

அதிமுக நிர்வாகிகளின் கூட்டத்துக்கு ஏன் அழைக்கவில்லை என அறந்தாங்கி எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்த நிலையில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சை, மக்களவைத் தேர்தலில் தோல்விக்கான காரணங்கள், உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அறந்தாங்கி அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ’’முன்பு கருத்து வேறுபாடு காரணமாக டிடிவி அணியில் இருந்தேன். இப்போது எந்த அணியிலும் இல்லை; அதிமுகவில்தான் இருக்கிறேன் என்று தெளிவாகக் கூறிவிட்டேன்.

இந்தக் கூட்டத்துக்கு என்னை அவர்கள் கூப்பிட்டிருக்க வேண்டும். அழைக்காததால் நான் வருத்தமும் படவில்லை, சந்தோஷமும் படவில்லை. ஒற்றைத் தலைமையோ, இரட்டைத் தலைமையோ, தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிற தலைமை, மக்கள் விரும்பும் தலைமை வேண்டும். அது என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்றைக்குத்தான் பழைய அதிமுகவைக் காணமுடியும்.

அனைத்துத் தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். அங்கு பெரும்பாலான தொண்டர்கள் யாரைச் சொல்கிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன்'’ என்றார் ரத்தினசபாபதி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close