[X] Close

முகநூலில் ஆபாச பதிவால் காதலர்கள் தூக்கு போட்டு தற்கொலை; நெய்வேலி அருகே சாலை மறியல், கல்வீச்சு, தடியடியால் பதற்றம்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:32 am
  • அ+ அ-

நெய்வேலி அருகே உள்ள குறவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே ஊரில் வசிக்கும் பிரேம்குமார் என்பவருக்கும், ராதிகாவை காதலித்து வந்த அவரது அத்தை மகன் விக்னேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் பிரேம்குமார் நேற்று முன்தினம் முகநூலில் ராதிகா குறித்து ஆபாசமாக பதிவிட்டார். இதனை அறிந்த ராதிகாவும் அவரைத் திட்டி பதிவிட்டு உள்ளார். உடனே பிரேம்குமார் தனது உறவினர்களுடன் வந்து ராதிகா வீட்டில் தகராறு செய்துள் ளார். உடனே ராதிகாவின் உறவினர் கள் பிரேம்குமார் வீட்டுக்கு சென்று பிரச்சினை செய்துள்ளனர்.

இந்நிலையில் முகநூல் பதிவால் மனவேதனையடைந்த ராதிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது அத்தை மகனான பார்வதி புரம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ் (21) செங்கால் பாளையம் கிராமத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்துக்கு சென்ற மந்தாரக்குப்பம் போலீஸார் ராதிகா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும், விக்னேஷ் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் ராதிகா வின் உறவினர்கள் பிரேம்குமாரை கைது செய்ய வலியுறுத்தி விருத் தாசலம் - கடலூர் சாலையில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் சிலர் கல்வீச்சில் ஈடுபட்ட தால் செய்தி சேகரித்து கொண்டு இருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னர் நள்ளிரவு 12 மணியள வில் மீண்டும் ராதிகாவின் உறவினர் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் தடியடி நடத்தி கூட் டத்தை கலைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பலத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிரேம் குமாரை போலீஸார் கைது செய்த னர். இதையடுத்து மருத்துவமனை களில் பிரேத பரிசோதனை முடிந்த ராதிகா, விக்னேஷ் உடல்களை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.

இதற்கிடையே, பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று நெய்வேலி அருகே உள்ள குறவன் குப்பம் கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட ராதிகாவின் பெற் றோருக்கு ஆறுதல் கூறினார்.

திருமாவளவன் வேதனை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘நெய்வேலி ராதிகா, விக்னேஷ் தற்கொலை சம்பவம் வேதனை அளிக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்கப்பூர்வ மான விஷயங்களை மட்டுமே பகிர வேண்டும். மத்திய அரசு சமூக வலைதளங்களை பயன் படுத்துவதற்கு புதிய வரை முறையை மேற்கொள்ள வேண் டும். அரபு நாடுகளைப்போல, ஆபாச வலைதளங்களைப் பயன் படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close