[X] Close

சென்னையில் இன்று நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்; ஒற்றை தலைமை கோரிக்கைக்கு தீர்வு காணப்படுமா?- அதிருப்தி நிர்வாகிகளை சரிகட்டும் அதிமுக தலைமை 


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:22 am
  • அ+ அ-

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கட்சித் தலை மைக்கு எதிராகக் குரல் எழுப்புவார் களா என்ற எதிர்பார்ப்பு தொண்டர் களிடம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டைத் தலை மைக்கு எதிராக விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

இதன் பின்னணியில் முக்கிய நிர்வாகிகள் இருக்கலாம் என்று கட்சியினர் கருதி வருகின்றனர். மேலும் ஜெயலலிதா இருந்திருந் தால் இந்த பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், ராஜன் செல்லப்பாவை தற்போ தைய கட்சித் தலைமை கண்டிக்க வில்லை. மாறாக கட்சி ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கை யில், உட்கட்சி விவகாரங்களை யாரும் வெளியே பேசக்கூடாது என்று மட்டும் கேட்டுக் கொண்டனர்.

ராஜன் செல்லப்பாவைத் தொடர்ந்து அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் உருவாகியுள் ளது. அதனால், இது குறித்தும், தேர் தல் தோல்வி குறித்தும் விவாதிக்க தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செய லாளர்கள், செய்தி தொடர்பாளர் கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோ சனைக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலு வலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் முதல்வர் பழனி சாமி ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுக தலைமை பணிந்து போகக்கூடியதாக இருக் கக் கூடாது. அதிகார பலத்துடன் நிர்வாகிகளை கட்டுப்படுத்தக் கூடிய தலைமையாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது இரட்டைத் தலைமையால் நிர்வாகிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிய வில்லை. ஒருவர் கண்டித்தால் மற் றொருவர் அரவணைக்கக் கூடிய நிலையில் இருப்பதால் நிர்வாகிகள் கட்டுப்பாடு இன்றி பேசி வருகிறார் கள். இது கட்சிக்கும், கட்சி எதிர் காலத்துக்கும் நல்லது அல்ல.

கூட்டத்தில் ஒருவர் தலைமைக்கு எதிராகப் பேசினால் அவரைத் தொடர்ந்து மற்ற மாவட்டச் செயலா ளர்கள், எம்எல்ஏக்கள் பேச ஆரம் பித்தால் கட்சிக்குள் பெரிய குழப் பம் ஏற்படும். அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதால் கூட் டத்தை சுமுகமாக முடிக்க கட்சித் தலைமை ராஜன்செல்லப்பா உட் பட அதிருப்தியாளர்களை அழைத் துப் பேசி சரிகட்டி உள்ளது.

ராஜன் செல்லப்பாவுக்கு தனிப் பட்ட முறையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வருத்தம் உள்ளது. அதற்கான காரணங்களை அவரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டு அதை தீர்க்கவும், பேசி முடிக்கவும் உறுதி கூறப்பட்டுள்ளது. கட்சித் தலைமையே இறங்கி வந்துள்ளதால் ராஜன்செல்லப்பா, மாவட்டச் செயலாளர்கள் கட்சித் தலைமையை எதிர்த்துப் பேச வாய்ப்பு இல்லை.

ஆனால், அவரைப்போல் யாரா வது இரட்டைத் தலைமைக்கு எதிரா கப் பேசினால் அவர்களை எப்படி சமாளிப்பது என்பதை கட்சித் தலைமை ஆலோசித்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை, கட்சிக்கு இரட்டைத் தலைமையின் அவசி யம், அதற்கான காரணங்கள் உள் ளிட்டவற்றை நிர்வாகிகளிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தெளிவுபடுத்த உள்ளனர். எனவே, கூட்டத்தில் குழப் பம் ஏற்படவாய்ப்பில்லை என்றனர். பொதுக்குழுவை கூட்டுவது, உட் கட்சி தேர்தல் குறித்தும் விவாதிக் கப்படலாம் என தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close