[X] Close

9-ம் வகுப்பு மாணவியை கடத்தியதாக போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது


9

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 08:45 am
  • அ+ அ-

டிக் டாக் வீடியோ மோகத்தால் பள்ளி மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள் ளார். அவரை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் அசாருதீன் (20). இவர் சென்னை சூளைமேட்டில் உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கு அரும்பாக்கத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அந்த மாணவின் செல்போன் எண்ணுக்கு ‘டிக் டாக்’ வீடியோக்களைத் தொடர்ந்து அனுப்பி, அவரை அசாருதீன் கவர்ந்துள்ளார். இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்து கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி கடந்த 30-ம் தேதி மாயமானார். இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து மாணவியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் அசாருதீனுடன் மாணவி அரக்கோணம் சென்று மீண்டும் 10 நாட் களுக்கு பிறகு சென்னை வந்தார். இதைத் தொடர்ந்து மாணவியை கடத்திச் சென்ற தாக அசாருதீனை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் கைது செய் துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close