[X] Close

புதிய கல்விக் கொள்கை, காவிரிப் பிரச்சினை வறட்சி குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 08:46 am
  • அ+ அ-

புதிய கல்விக் கொள்கை, காவிரிப் பிரச்சினை மற்றும் வறட்சி குறித்து விவாதிக்க சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு கூட்டம் சென் னையில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆர்எஸ்எஸ்ஸின் மறைமுக நிகழ்ச்சி நிரலை தேசத்தின் நிகழ்ச்சி நிரலாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கடந்த 5 ஆண்டு களாக மோடி அரசு மேற்கொண்டு வந்தது. மத்தியில் மீண்டும் மோடி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்ஸின் செயல்திட்டத்தை மேலும் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது.

பன்முக இந்தியாவின் ஒருமைப் பாட்டையும், பொதுக்கல்வி முறையையும் சீரழிக்கும் பல்வேறு அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்துத்துவக் கோட்பாடுகளை பாடத்திட்டத்தில் புகுத்தும் ஆபத்தான திட்டங்கள் இந்த வரைவுத் திட்டத்தில் உள் ளன. பாடத்திட்டம், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்தும் தலைகீழ் மாற்றங்களுடன் முன்மொழியப் பட்டுள்ளன. கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் மீதான கருத்துகளை தெரிவிக்க குறைந் தபட்சம் 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.

மேட்டூர் அணை

இந்த ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு 9.2 டிஎம்சி. தண் ணீரை ஜூன் மாத இறுதிக்குள் திறந் துவிட வேண்டுமென்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கர்நாடகா தரப் பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள் ளது.

தண்ணீர் பெற நடவடிக்கை

இதனால் காவிரி பாசன பகுதி விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. எனவே, கர்நாட கத்திடம் இருந்து தண்ணீரைப் பெற தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்காக மக்கள் அவதிப்படுகின்றனர். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் மக்களின் துயரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கை, காவிரிப் பிரச்சினை, வறட்சி குறித்து விவாதிக்க தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close