[X] Close

தமிழகத்தில் சில இடங்களில் கனமழை வாய்ப்பு


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 08:35 am
  • அ+ அ-

வெப்ப சலனம் காரணமாக தமிழ கத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரண மாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங் களில் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

அரபிக்கடலில் வாயு புயல் உருவாகியுள்ளதால், தென் மேற்கு பருவமழை பொழிவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும். எனவே, மக்கள் பகல் 11 முதல் பகல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close