[X] Close

குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 08:32 am
  • அ+ அ-

தமிழகத்தை குழந்தைத் தொழி லாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சி களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குழந்தைப் பருவம் மனித வாழ்வின் பொற்காலம். பள்ளி சென்று கல்வி பயிலவும் ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்ச்சி யாக செல்ல வேண்டிய குழந்தைப் பருவத்தில் வேலைக்கு செல்வது அவர்களின் ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கக் கூடியது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த, உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. கல்விச் செல்வம் பெற்று வளர்ந்து செழித்து மிளிரவேண்டிய பருவத் தில், வேலை பளுவைச் சுமந்து நிற்கும் குழந்தைகளை அதில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தைப் பருவத் தையும், முறையான கல்வியையும் உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.

இக்குறிக்கோளை விரைவில் எட்டிடவும், வளமான மனித வளத்தை உருவாக்கவும் தமிழக அரசின் சார்பில் குழந்தைத் தொழி லாளர்கள் மீட்டெடுக்கப்படுகின் றனர். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மையங்களில் கல்வி அளிக்கவும், பெற்றோர்களின் சுமைகளை குறைக்கும் வகையிலும், இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப் பை, முட்டையுடன் கூடிய பல வகையான சத்தான மதிய உணவு, கல்வி உபகரணங்கள், மடிக்கணிணி, மிதிவண்டி, கட்டண மில்லாப் பேருந்து வசதி மற்றும் உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை என எண்ணற்ற உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் நாட்டி லேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறை வடையாத வளரிளம் பருவத்தின ரையும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்துள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் குழந் தைகளின் உரிமைகளை மதித் திடுவோம். குழந்தைகளை, வேலைக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோரும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலை யளிப்பவர்களும் உறுதியேற்க வேண்டும். தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சி களுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close