[X] Close

ஆரோவில் அருகே முந்திரி தோப்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடந்தது என்ன?- நேரில் விசாரணை நடத்திய விழுப்புரம் எஸ்.பி விளக்கம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:58 am
  • அ+ அ-

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியான ஆரோவில் அருகே 'வீக் எண்ட்' கொண்டாட்டம் என்ற பெயரில் சனிக்கிழமை இரவில் மின்னொளியில் இசையுடன் ஆடிப்பாடி கொண்டாட வாருங்கள் என்று இணைய தளத்தில் விளம்பரம் வெளியானது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு ஜோடிக்கு ரூ.1,000 கட்டணம் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இணையத்தில் பார்த்த பலரும் பணத்தைக் கட்டி, டிக்கெட் புக் செய்துள்ளனர். இதில் இளை ஞர்கள், இளம் பெண்கள் மது அருந்தி ஆடிப் பாடுவதாக புகார் வந்தது.

எஸ்.பி. உத்தரவின் பேரில், போலீஸார் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, பண த்தை ஆன் லைனில் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு பேச முடியும் எனக் கூறி தொடர்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் துண்டித்தார்.

பின்னர் ஆரோவில் போலீஸார், வேறொரு நபரை அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச வைத்து, ஆன் லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்தினர். அதன் பின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கான கூகுள் மேப் லிங்கை பணம் கட்டியவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு நிகழ்ச்சி நடத்துவோர் அனுப்பி வைத்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் எஸ்.பி ஜெயகுமார் தலைமையில் பெண் போலீஸார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பைக்கில் முந்திரி காட்டுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் பயணித்து, பின்னர் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று போதையில் நடனமாடியவர்களை சுற்றி வளைத்தனர்.

இச்சம்பவம் குறித்து எஸ் பி ஜெயகுமார் நேற்று செய்தியாளர் களிடம் கூறியது:

நாங்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நெருங்கியவுடன் அனை த்து விளக்குகளும் அணைக்கப் பட்டன. அங்கு இருந்த 3 பெட்டர் மாஸ் விளக்குகளுடன் போதையில் ஆடிபாடிக்கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோரை விசாரித்தோம். அவர்கள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் இருவர் திரைப்பட உதவி இயக்குநர்கள். மேலும் 4 மருத்துவர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பட்டியல் நீள்கிறது.

டிக்கட் வாங்கி செல்பவர் களுக்கு வெல்கம் டிரிக்ஸாக ஒரு டின் பியர் வழங்கப்படுகிறது. அடுத்து அங்கு ரூ. 200க்கு ஒரு டின் பியர் என விற்கப்பட்டுள்ளது. வேறு வகையான மதுபானங்கள் விற்கப்படவில்லை. சிலரிடம் சேகரிக்கப்பட்ட 125 கிராம் கஞ்சா மற்றும் 161 டின் பியர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிய அனுமதி பெறப்பட் டுள்ளது என்று கூறியதாலேயே இதில் பங்கேற்றோம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். எனவே அவர்களை அனுப்பி விட்டு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 15 பேரை கைது செய்துள்ளோம். இப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்க கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close