[X] Close

பதவியை எதிர்பார்த்து தேர்தலின்போது பிரச்சாரம் செய்யவில்லை: உதயநிதி


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 08:46 am
  • அ+ அ-

திமுக சார்பில் தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தை மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

கட்சியில் எனக்கு புதிதாக ஒரு பொறுப்பை கொடுக்கப் போவதாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்து கொண்டுள்ளன.

இந்த சமயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு வேண்டுகோள் வைக் கிறேன். பொறுப்பு, பதவியை எதிர்பார்த்து நான் பிரச்சாரம் செய்யவில்லை. திமுக தொண்டர்களில் ஒருவன் என்ற பொறுப்பு போதும். வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதுதான் எனது முதல் வேலை. இதற்காக தெருத்தெருவாக இறங்கி பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்றார்.

திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி பேசியபோது, "தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணியைப் போல அனைத்து மாநிலங்களிலும் கூட்டணியை உருவாக்கி இருந்தால் பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிடம் ஆட்டம் கண்டுள் ளது.

முன்னாள் முதல்வரின் கருணாநிதியின் அடுத்த பிறந்த நாளின்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பார் என்றார்.

இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் எம்.பி பேசியபோது, “வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செல்லுமிடங் களில் எல்லாம் தண்ணீர் பிரச்னை இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை.

எனவே, பல பகுதிகளில் என் சொந்த செலவில் போர்வெல் அமைத்தும், லாரிகள் மூலமும் குடிநீர் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளேன். எந்த நோக்கத்துக்காக வெற்றி பெறச் செய்தார்களோ, அதை நிச்சயம் செய்வேன்” என்றார்.

நாகை எம்.பி எம்.செல்வராஜ் பேசியபோது, "தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் தண்ணீர் பஞ்சம் உள்ளது.

தண்ணீர் பிரச்சினைக்காகவும், காவிரி பிரச்சினைக்காகவும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து, தீர்வு காண வேண்டும்" என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் எம்.காதர் மொகிதீன் பேசியபோது, "இனியாவது மு.க.ஸ்டாலினின் வழிமுறையை மற்ற மாநிலங்களின் கட்சிகள் பின்பற்ற வேண்டும்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close