[X] Close

மத உணர்வை அவமதிக்கும் வகையில் முகநூலில் புகைப்படம் பதிவிட்ட இளைஞர் சிறையில் அடைப்பு அதிக ‘லைக்' வாங்க ஆசைப்பட்டு சிக்கினார்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:25 am
  • அ+ அ-

இந்து மத தெய்வங்கள் தொடர்புடைய சிற்பங்களை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சையில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்து கோயில்களுக்கான பெண்தெய்வச் சிற்பங்களுடன், விதவிதமான போஸ்களில் இருக்கும் படங்களை முஜிபுர் ரஹ்மான் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். இவை, சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இதையடுத்து, இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் புகைப்படம் பதிவிட்ட அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசுக்கும், காவல் துறைக்கும் கோரிக்கை விடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவுஇதுதொடர்பாக திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவைச் சேர்ந்த ரத்தினவேல்(23) என்பவர்அளித்த புகாரின்பேரில் கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த இளைஞர் திருநெல்வேலியைச் சேர்ந்த காஜாமைதீன் மகன் முஜிபுர் ரஹ்மான்(28) என்பதும், கடந்த சில மாதங்களாக திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்தபடி தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மத உணர்வுகளை அவமதித்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்து கடந்த ஜூன் 8-ம் தேதி இரவு முஜிபுர் ரஹ்மானை கண்டோன்மெண்ட் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு நேற்று முன்தினம் முஜிபுர் ரஹ்மானை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸார் தகவல்

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: முஜிபுர் ரஹ்மான், ரம்ஜான்பண்டிகை அன்று தனது சகோதரிகுடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். அங்குஅழகான பெண் சிற்பங்கள் இருந்துள்ளன. அவற்றை பார்த்துக்கொண்டிருந்தபோது, முகநூலில், அதிக ‘லைக்' பெறும்எண்ணத்தில் அந்த சிற்பங்களுடன்தான் இருப்பது போன்றபடங்களை எடுத்து சில வாசகங்களுடன் பதிவிட்டதாகவிசாரணையின்போது முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். எனினும் அவர் செய்த செயல்,இந்து மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருந்ததால் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தோம்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close