[X] Close

சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மீனவர் 32 பேர் விடுதலை


32

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:24 am
  • அ+ அ-

பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 32 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த டிசம்பரில் 7 மீனவர்களும், கடந்த மார்ச்சில் 25 இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்தாக, இந்திய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இலங்கை சென்ற பிரதமர் மோடி, கொழும்பில் உள்ள தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடியின் இலங்கைபயணத்தை முன்னிட்டு நல்லெண்ண நடவடிக்கையாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 32 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுஉத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புழல் சிறையில் இருந்த 32 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி புத்தமடத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close