[X] Close

எழும்பூர் ரயில் நிலைய முகப்பில் 100 அடி உயர கொடி மரத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி


100

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:16 am
  • அ+ அ-

சென்னை எழும்பூர் ரயில் நிலைய முகப்பில் பிரம்மாண்ட மாக 100 அடி கொடி மரத்தில் தேசியக் கொடி நேற்று ஏற்றி வைக்கப்பட்டது.

மக்களிடையே தேசிய உணர்வை ஏற்படுத்தி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும், முக்கிய ரயில்வே அலுவலகங்களிலும், 100 அடி உயரத்தில் பிரம்மாண்ட கொடிமரங்களை நிறுவி தேசியக் கொடி ஏற்ற அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, சென்னை சென்ட்ரல், ஐசிஎப் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 அடி பிரம்மாண்ட கொடி மரத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, எழும்பூர் ரயில் நிலைய முகப்பில் 100 அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடி மரத்தில் மூத்த வர்த்தக நிலைய மேலாளர் பி.அன்பழகன் தேசிய கொடியை நேற்று ஏற்றி வைத்தார். கொடி 100 அடி உயரத்தில் அமைந்திருப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள எந்த இடத்தில் இருந்தும் பார்க்க முடியும். இரவு நேரங்களில் இந்த பிரம்மாண்ட மூவர்ணக் கொடி தெளிவாகத் தெரியும் வகையில் கொடிக் கம்பத்தில் பிரகாசமான விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close