[X] Close

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் சட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இலவச தொலைபேசி எண்: ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:11 am
  • அ+ அ-

சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் சட்டம் மற்றும் இணையதளம் குறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வ தற்கு 1800 599 01234 என்ற இலவச தொலைபேசி எண் ஒரு வாரத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்என்று வீட்டு வசதித் துறைசெயலர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்தின்மீது இருதரப்புக்கும் உள்ள உரிமைகளை பாதுகாக்க, தமிழ்நாடு சொத்து உரிமையாளர் - வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

இச்சட்டம் குறித்து விளக்கம் அளிப்பதுடன், இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் குறித்து கோட்டாட்சியர் மற்றும் வாடகை அதிகாரிகளுக்கான செயல்முறை விளக்க பயிற்சி வகுப்பு, சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடத் தப்பட்டது.

இதில் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் பங்கேற்றார். சென்னை ஃபாக்ஸ் மண்டல் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் பி.ஜெயபிரகாஷ்,சட்டம் குறித்து விளக்கம் அளித் தார். இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது, தொடர் நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம், சென்னை சிஎம்எஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செயல்முறை விளக்கம் அளித் தனர்.

பயிற்சியை தொடங்கி வைத்துபேசிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் கிருஷ்ணன், ‘‘வருவாய் கோட்ட அலுவலர்கள், தனித் துணை ஆட்சியர்களுக்கு மண்டல அளவிலான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த சட்டம், இணையதள செயல்பாடு குறித்து பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு 1800 599 01234 என்ற இலவச தொலைபேசி எண் ஒரு வாரத்துக்குள் செயல் பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்.

அவகாசம் நீட்டிப்பு

சொத்து உரிமையாளர், வாடகைதாரர் சட்டம், கடந்த பிப்.22-ம்தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த தேதிக்கு முன்பாகஎழுதப்படாத ஒப்பந் தங்களை எழுத்து மூலமாக ஏற்படுத்தி, பதிவு செய்வதற்கு 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் மேலும் 4 மாதங்கள் நீட்டிக் கப்பட்டு, 7 மாதங்கள் வரை ஒப்பந்தங்களை எழுத்து மூலமாக பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close