[X] Close

சென்னையில் ஸ்டாலினுடன் இலங்கை எம்பி சந்திப்பு


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:13 am
  • அ+ அ-

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப் பினருமான ரவூப் ஹக்கிம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் நேற்று காலை நடந்த இந்தச் சந்திப்பின்போது சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு ரவூப் ஹக்கிம் வாழ்த்து தெரிவித்தார்.

அரசியல், சமூக சூழ்நிலை..

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு அந்நாட்டில் நிலவும் அரசியல், சமூக சூழ்நிலை குறித்தும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள், பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த 6-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மாவை சேனாதிராஜா, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close