[X] Close

கத்தி முனையில் பணம் பறிக்க முயற்சி; ஒன்றும் கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர் மீது தாக்குதல்: 6 பேர் கைது


6

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:05 am
  • அ+ அ-

கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றபோது இளைஞரிடம் பணம் இல்லாத ஆத்திரத்தில் தாக்குதல் நடத்திய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூர், சாத்தாங் காடு, ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் சூசை. இவர் கடந்த 8-ம் தேதி இரவு சாத்தாங்காடு வழியாக நடந்து சென்றார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. ஜெயராஜை கத்திமுனையில் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தபோது, ஜெயராஜிடம் பணம் எதுவும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிவிட்டது.

இதுகுறித்து சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

தொடர் விசாரணை

போலீஸாரின் விசாரணையில் தாக்குதல் நடத்தியது ஜோதி நகர், சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (19), அரவிந்த் (19), ஹாட்லி பெர்னாண்டோ (18), மணிகண்டன் (19), மற்றொரு மணிகண்டன் (20) மற்றும் 16 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இவர்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close