[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது


248

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:06 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.24 ஆயிரத்து 888-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென குறைந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.24 ஆயிரத்து 888க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 111க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 142க்கு விற்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானிகூறுகையில், ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சிறிய அளவில் குறைந்துள்ளது. இதேபோல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சற்று உயர்ந்துள்ளது. இதனால், தங்கம் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், நகை கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இது ஒரு தற்காலிகநிகழ்வு தான். அடுத்த சில நாட்களில் தங்கம் விலையில் மீண்டும் உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close