[X] Close

மக்கள் கோரிக்கை விடுத்தால் அரசு பரிசீலிக்கும்; தனியார் பள்ளி வாகன கட்டணம் முறைப்படுத்தப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:09 am
  • அ+ அ-

தனியார் பள்ளி வாகனங்களில் ஆண்டுக் கட்டணத்தை முறைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தால் அதை தமிழக அரசு பரிசீலிக்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில்பள்ளி வாகனங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைமுடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளி வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வாகனங்களில்அவசரகால கதவு, வேகக்கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு குறைபாடு இருந்தால், வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படமாட்டாது.

சாலை விபத்துகளைக் குறைக்கவேண்டும் என்ற நோக்கில் சாலைபாதுகாப்புக்காக அதிகமான நிதியை தமிழக அரசு வழங்கிவருகிறது. ஆக்கப்பூர்வமானநடவடிக்கையால் 24 சதவீத சாலை விபத்து உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக் கான பாடத்திட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுவரையில் 31,143 பள்ளி வாகனங்களில் ஆய்வுகள் நடத் தப்பட்டுள்ளன. இதில் 1,009 வாகனங்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாகசரி செய்யுமாறு உத்தரவிடப்பட் டுள்ளது. மேலும், ஆய்வுக்கு உட்படுத்தாத 1,433 வாகனங்களிலும் முழு ஆய்வு நடத்தப்படும்.

கடந்த ஆண்டில் 20.55 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 24.20 லட்சம் இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவரையில் பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி இலவசமாகவே பயணிக்கலாம்.

பேட்டரி மூலம் இயக்கப்படும் 2,000 பேருந்துகள், பிஎஸ்.6 தொழில்நுட்பத்தில் 12,000 பேருந்துகளை இயக்கவுள்ளோம். முதல்கட்டமாக சென்னை, கோவை போன்ற நகரங் களில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி வாகனங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்து எந்த விதியும் இல்லை. எனவே,ஆண்டு கட்டணத்தை முறைப் படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தால் அதை அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது போக்கு வரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close