[X] Close

மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி அருகே தீ விபத்து: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:03 am
  • அ+ அ-

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் இருந்த கோரைப் புல்வெளி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் நாராயணா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் பள்ளியின்பின்பக்கத்தில் உள்ள கோரைப் புல்வெளியில் காலை 11 மணியளவில் திடீரென தீ பிடித்தது.

இதைத் தொடர்ந்து தீயணைப்புதுறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காணப்பட்டது. புகை மூட்டத்தால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும்கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

50 மரங்கள் கருகின

தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தீ விபத்து குறித்து ஓட்டேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத் தினால் பள்ளிக்கு அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகின.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close