[X] Close

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி பூக்கள்


kurinji-flower-kodaikkanal-flower

கொடைக்கானல் ஏரிச்சாலை ஜிம்கானா பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி பூக்கள்

  • kamadenu
  • Posted: 11 Jun, 2018 14:30 pm
  • அ+ அ-

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல் ஏரிச்சாலையில் பூத்து குலுங்குவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். 

கொடைக்கானலில் குறிஞ்சி செடிகள் அதிகளவில் உள்ளன. இவை பூக்கும்போது மட்டுமே மக்களை கவர்வதாக உள்ளது. ஆனால், அதற்கு 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த அபூர்வ குறிஞ்சி செடிகளை பாதுகாக்கவே ‘சேவ் குறிஞ்சி’ என்ற விழிப்புணர்வு இயக்கம் கொடைக்கானலில் நடத்தப்படுகிறது. மலைப் பகுதிகளுக்கே உரிய பூவாக குறிஞ்சி மலர் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இந்த மலர்கள் பூப்பதால், இதை பராமரிப்பதில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. இருந்தபோதும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயற்கையாகவே குறிஞ்சி செடிகள் ஏராளமாக வளர்கின்றன.

இயற்கை ஆர்வலர்கள் சிலர், குறிஞ்சி செடிகளை பராமரிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் காணும் வகையில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் ஜிம்கானா மைதானம் அருகே குறிஞ்சி செடிகள் பூத்துக் குலுங்குகின்றன. குறிஞ்சி செடியின் மகத்துவத்தை அறிந்த சுற்றுலா பயணிகள் பலர், அடுத்து 12 ஆண்டுகள் கழித்தே இந்த காட்சியை காண முடியும் என்பதால், குறிஞ்சி மலரை ஆர்வமுடன் ரசிக்கின்றனர்.

 கொடைக்கானலைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் அப்பாஸ் கூறியதாவது: குறிஞ்சிச் செடிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் மட்டுமே வளர்பவை. 

தற்போது ஊட்டி பகுதியில் குறிஞ்சிச் செடிகள் பராமரிப்பின்றி வெகுவாகக் குறைந்து விட்டன. தற்போது கொடைக்கானலில் அதிகளவில் குறிஞ்சிச் செடிகள் காணப்படுகின்றன. இவற்றை நாம் முறையாகப் பராமரிக்க வேண்டும். குறிஞ்சி மலரை அடுத்த தலைமுறைக்கும் நாம் எடுத்துச்செல்ல குறிஞ்சிச் செடியை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் பகுதியில் நகராட்சி சார்பில் குறிஞ்சித் தோட்டம் அமைக்கப்பட்டு, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. குறிஞ்சி செடியை பாதுகாக்க அதை பராமரிப்பது மிக அவசியம் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close