[X] Close

பணத்தை மதிக்காத ஓர் அரசியல்வாதி: அறியப்படாத உண்மைகளைக் கூறும் அதிமுக முன்னாள் அமைச்சரின் வாழ்க்கை வரலாறு


when-a-politician-said-no-to-money

  • பாரதி ஆனந்த்
  • Posted: 11 Jun, 2018 14:06 pm
  • அ+ அ-

ப.கோலப்பன்

பணம்.. இன்று இந்த ஒன்று மட்டும்தான் தேர்தல் அரசியலின் அத்தனை கோணங்களிலும் நிரம்பியிருக்கிறது. ஆனால், தேர்தல் வெற்றியைப் பெற்றுத்தரும் வல்லமைமிக்க அந்தப் பணத்தை மிக நெருக்கடியான சூழலில் தேர்தலில் எதிர்கொண்டிருந்த வேளையிலும்கூட பயன்படுத்த திமுக நிறுவனர் சி.என்.அண்ணாதுரை மறுத்துவிட்டார் என்ற வியத்தகு உண்மையைக் கூறியிருக்கிறது எஸ்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்று நூல்.

ஆம், 1962 தேர்தல் திமுகவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தேர்தல் வெற்றிக்காக எம்.ஜி.ஆர் அளித்திருந்த தொகையை விநியோகித்து வெற்றியைப் பெற அண்ணாதுரை விரும்பவில்லை. கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற எம்ஜிஆரும் விரும்பவில்லை. கடைசியில் அந்தப் பணத்தைக் கொண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் அண்ணாதுரைக்கு ஒரு வீடு வாங்க்கப்பட்டதாகக் கூறுகிறது எஸ்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்று நூல்.

பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோருடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் எஸ்.ஆர்.ராதா. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். அவரது வாழ்க்கை வரலாறு நூலாகியுள்ளது. 'பகுத்தறிவு சுடர் எஸ்.ஆர்.ராதா' என்ற அந்த நூலை ஆர்.ஆர்.குபேந்திரன் எழுத்தியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை வெளியான இந்த நூல் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் ஒரு தலைவர் பார்வையில் தேர்தல் வெற்றி குறித்தும் பேசியிருக்கிறது. இந்தப் புத்தகம் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்த எந்த ஒரு சிறிய வாய்ப்பையும்கூட தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆருடன் பிளவு ஏன்?
திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகியதற்குப் பரவலாகப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும்கூட அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கு மீதான தடையை நீக்கியதுதான் முக்கியக் காரணம் என்று இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நிதி நிலைமையை சீர் செய்ய மதுவிலக்கை திரும்பப்பெற வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் கருணாநிதி சமாதானம் கூறி அனுமதி பெற்றாலும்கூட அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளாதது அவர் அந்த முடிவுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்கவில்லை என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது என அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பெரியாருடன் நட்பு பாராட்டி வந்த அண்ணாதுரைகூட பெரியார் - மணியம்மாள் திருமணத்துக்குப் பின் விலகி நிற்க எஸ்.ஆர்.ராதா மட்டும் பெரியாருடன் நெருங்கிய உறவில் இருந்தார். கும்பகோணம் பொதுக்கூட்டத்துக்கு பெரியாரை எஸ்.ஆர்.ராதா அழைத்தார். இதனால், அண்ணாதுரைக்கு எஸ்.ஆர்.ராதா மீது கோபம் ஏற்படும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், அண்ணாவோ ராதாவை வெகுவாகப் பாராட்டினார். தன்னை சரியாக கணித்து வைத்திருப்பவர் என ராதாவை அவர் புகழ்ந்தார் என நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியார் மீது எஸ்.ஆர்.ராதாவுக்கு அளவில்லா ஈர்ப்பு இருந்தாலும்கூட நாச்சியார்கோயிலில் பிராமணர்களின் பூனூலை திராவிடர் கழகத்தினர் அறுத்தபோது அதை எதிர்த்து சட்டப்பேரவையில் குரல் எழுப்பியவர்தான் எஸ்.ஆர்.ராதா என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திமுகவுக்கு வெற்றி தேடித்தந்த பேச்சு..
கருணாநிதிக்கும் எஸ்.ஆர்.ராதாவுக்கும் இடையேயான நட்புறவைக் குறித்தும் இப்புத்தகம் பேசியிருக்கிறது. தஞ்சை சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தில் எஸ்.ஆர்.ராதா கருணாநிதிக்கு ஆதரவாகப் பேச நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது எஸ்.ஆர்.ராதா சவுராஷ்டிரா மொழியில் பேசினார். இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கருணாநிதி அனைவரையும் அமைதி காக்கும்படிக் கூறினார். சில விநாடிகளில் அந்த பொதுக்கூட்ட மேடைக்கு அருகே கூட்டம் சேர்ந்தது. அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றியும் கிட்டியது. இதனை, இந்தப் புத்தகம் ஆவணப்படுத்தியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது எஸ்.ஆர்.ராதா மீன்வளத் துறை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் எஸ்.ஆர்.ராதா ஜெயலலிதாவை ஆதரித்தார். இதற்காக அவருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கினார்.

ஆனால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம் எஸ்.ஆர்.ராதாவை ஓரங்கட்டியது. ஜி.விஸ்வநாதன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருடன் எஸ்.ஆர்.ராதாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close