[X] Close
 

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டப்படும்: கனிமொழி ஆவேசம்


kanimozhi-slams-edappadi-palanisamy

  • பாரதி
  • Posted: 11 Jun, 2018 12:30 pm
  • அ+ அ-

கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டும் என திமுக எம்.பி., கனிமொழி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "புதிய தலைமுறை சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பத்திரிக்கை சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயலாகும். அரசு கேபிளில் 124வது இடத்திலிருந்து புதிய தலைமுறையை 499ம் இடத்துக்கு தள்ளியிருப்பது, அற்பத்தனமான நடவடிக்கை. 

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்ட பல சர்வாதிகாரிகளுக்கு வரலாறு சரியான பாடம் புகட்டியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிலிருந்து உரிய பாடம் கற்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் புதிய தலைமுறை சேனல் சார்பில் வட்ட மேசை விவாதம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் மக்களின் அடிப்படை தேவைக்களுக்கா? அரசியல் காரணங்களுக்கா? என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால், நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் தெரிவித்த கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே நின்றது. இந்நிலையில், நிகழ்ச்சி தொடர்பாக கோவை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், புதிய தலைமுறை சேனல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பத்திரிக்கை சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல் என கனிமொழி விமர்சித்திருக்கிறார். கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close