[X] Close

குற்றச்செயல் புரிவோரின் கைரேகையை ஆன்லைனில் அறியும் வசதி அமலுக்கு வருகிறது


forensic-department

  • kamadenu
  • Posted: 06 Jun, 2018 11:58 am
  • அ+ அ-

என்.சன்னாசி

குறறச்செயல் புரிவோரின் விரல் ரேகையை மாநிலளவில் ஆன்லைனில் ஒப்பிட்டு கண்டறியும் புதுத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என, விரல் ரேகைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க, பெரிதும் உதவியாக இருப்பது விரல் ரேகை பதிவு. திருட்டு, கொள்ளை, ஆயதாயக் கொலை போன்ற முக்கிய குற்றச் சம்பவம் நடக்குமிடத்திற்கு முதலில் விரல் ரேகை பிரிவு நிபுணர்கள் செல்வர். சம்பவ இடத்தில் கிடைக்கும் ரேகை பதிவின் அடிப்படையில் சந்தேக நபர்களின் ரேகையோடு ஒப்பீடு செய்து, குற்றம் புரிவோரை உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமரா உட்பட சில நவீன உத்தி மூலம் குற்றவாளி பற்றி துப்பு துலக்கினாலும், விரல் ரேகை ஆதாரமே முக்கிய தீர்ப்புகளுக்கு உதவுகிறது.

காவல்துறை வலைப்பின்னல் திட்டத்தில் (சிசிடிஎன்எஸ்) குற்றச் செயல் புரிவோரை துரிதமாக கண்டறிய ரேகை உட்பட குற்றப்பின்னணி குறித்த பல்வேறு விவரம் ஆன்லைனில் பதிவு செய்கின்றனர். மாவட்டம் மாநிலம் மட்டுமின்றி மாநில அளவிலும் குற்றப்பதிவேடு பிரிவுகளுடன் ஒருங்கிணைத்து ஆன்லைனில் குற்றம் புரிவோர் பற்றி தகவல்கள் அறியப்படு கிறது.

இதே போன்று விரல் ரேகை பிரிவிலும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கணிணி உட்பட தேவையான உபகரணங்கள் சில ஆண்டுக்கு முன்பே கொள்முதல் செய்தும், செயல்படாமல் இருந்தது. போதிய ஆட்கள் இன்றி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. குற்றத் தன்மையை பொறுத்து சந்தேக நபர்கள் விரல் ரேகைகளை பல்வேறு மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பி உறுதி செய்தனர். இதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து காவல்துறை விரல் ரேகை பிரிவு ஆன்லைன் ஆக்கப்பட்டுள்ளது. குற்றம்புரிவோரின் ரேகைகளை ஒப்பிட்டு அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து அப்பிரிவு போலீசாருக்கு சென்னையில் பயிற்சி தரப்படுகிறது. மாநில அளவில் குற்றச் செயல் புரிவோரை வகைப்படுத்தி கண்டறியும் பயிற்சி அளிக் கப்படுகிறது. இனிமேல் ஒரே இடத்தில் இருந்து மாநிலம், இந்தியளவில் குற்றவாளிகளின் ரேகையோடு ஒப்பிட்டு பார்க்கலாம் என, அப்பிரிவின் தெரிவித்தனர்.

விரல் ரேகை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது:
ஒவ்வொரு மாவட்ட காவல்துறையிலும் குற்றப்பதிவேடு கூடம் செயல்படுகிறது. இங்கு குற்றச் செயல்புரிவோர் குறித்த பல்வேறு தகவல் சேகரிக்கப்படுகிறது. இத்தகவல்களை வலைப்பின்னல் திட்டம் (கிரைம், கிரிமினல், டிராக்கிங் நெட்வோர்க் சிஸ்டம்) ஒருங்கிணைத்து ஆன்லைனில் பார்க்க லாம். காவல் நிலையங்களில் பதிவாகும் எப்ஐஆர் விவரங் களும் உடனுக்குடன் ஆன்லைனில் ஏற்றப்படுகிறது. இதன்படி, விரல் ரேகை பிரிவில் சேகரிக்கும் பதிவுகளை ஆன்லைன் ஒப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரல் ரேகை பிரிவில் 80 சதவீதம் காலியிடம் உள்ளது.

டிஎஸ்பி, ஆய்வாளர், எஸ்ஐ ரேங்கில் காலியிடம் அதிகம். ஆன்லைன் திட்டம் நடை முறைக்கு வந்தாலும், செயல்படுத்துவதற்கு டிஎஸ்பி, ஆய் வாளர்கள், எஸ்ஐ தேவை. இப்பதவிகள் நிரப்பாமல் உள்ளதால் தொய்வு நிலை ஏற்படும். 2011-முதல் 2015 வரையில் ரேகை பதிவுகளை குற்றப்பதிவேடு கூட்டத்தில் இருந்தும்,இனிமேல் விரல் ரேகை பிரிவில் சேகரிக்கும் பதிவுகள் ஆன்லைனிலும் ஏற்றப்படும். மேலும், ஆதார் எண்களை போலீஸ் ஆன்லை னோடு இணைத்தால் சந்தேக நபர்கள் குற்றத் தகவல் களை கண்டறியலாம், என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close