[X] Close
 

எழுத்துப்பிழையுடன் ட்வீட் செய்த முதல்வர்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்


cm-edapadi-tweet

  • பாரதி
  • Posted: 05 Jun, 2018 16:28 pm
  • அ+ அ-

கண்ணியத்திற்குரியவர் என்று போற்றப்படுபவர் காயிதே மில்லத். அவரைப் பற்றி பேசும்போதோ எழுதும்போதோ கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் என்று அடைமொழியுடன் குறிப்பிடுவதே இன்றளவும் வழக்கத்தில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று காயிதே மில்லத்தின் 123-வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து முதல்வரின் அதிகாரபூர்வ பக்கத்தில் ட்வீட் வெளியாகியிருக்கிறது.

அதில், "கன்னியத்தென்றல் காயிதேமில்லத் அவர்களின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் இன்று(5.6.18) மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினேன்" என ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

கண்ணியம் என்று எழுதுவதற்குப் பதிலாக கன்னியம் என அவர் எழுத்துப்பிழையுடன் எழுதியிருப்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கன்னித்தமிழ் வாழ்க என்று சிலர் கிண்டலாக கமென்ட்டுகளும் பதிவு செய்துள்ளனர். 

ஏற்கெனவே தஞ்சாவூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கம்பராமாயணம் தந்த சேக்கிழார் வாழ்ந்த பூமி இது" எனக் குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது தமிழில் எழுத்துப்பிழையோடு ட்வீட் செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


d7

[X] Close